#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒரு புகைப்படத்துக்காக உயிரை பணயம் வைத்து ரிஸ்க் எடுத்த இளம் நடிகை!
கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ரேஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து படத்தின் நாயகி ரேஷ்மிகா மந்தனாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்தனர்.
இந்நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் ரேஷ்மிகா மந்தனா நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் படக்குழு நயன்தாராவை ஒப்பந்தம் செய்தது.
தற்போது ரேஷ்மிகா மந்தனாவின் புகைப்படம் ஓன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவில் உள்ள மிகப்பெரிய ஏரியான Bellandur Lake அதிகமாக மாசு பட்டு வருவது அவருக்கு கவலையை அளித்துள்ளது.
இதனால் அந்த ஏரியை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ரேஷ்மிகா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் மாசடைந்த ஏரி நீரில் குதித்து உள்ளிருக்கும் குப்பைகளை காண்பித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
ரேஷ்மிக்காவின் இந்த முயற்சியானது மக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஒரு விழிப்புணர்வுக்காக தனது உயிரையே பணயம் வைத்து ரேஷ்மி கா செய்த காரியம் அவரது ரசிகர்களிடையே அவர் மீது உள்ள மரியாதையை அதிகரித்துள்ளது.