பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வேண்டியது கிடைத்துவிட்டது - முதல்முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சமீரா ரெட்டி!
தமிழ் சினிமாவில் கவுதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதனை தொடர்ந்து அவர் வெடி, வேட்டை, அசல் போன்ற ஒருசில படங்களில் நடித்தார்.
2014ஆம் ஆண்டு அக்சய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் சமீரா ரெட்டி. இவர்களுக்கே ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் சமீரா ரெட்டி மீண்டும் கர்ப்பமாகி கடந்த 12ஆம் தேதி எரு அழகான் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
முதல் நாளிலே பிறந்த மகளின் கைவிரல்களை மட்டும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சமீரா தற்போது தனது பெண் குழந்தையை கையில் ஏந்தியவாறு புதிய புகைப்படம் ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.
எனது குட்டிக்குழந்தை எனக்கு மிகப்பெரிய தைரியத்தை கொடுத்துள்ளார். என் அனைவரும் மிகுந்த கருணையுடன் நடந்து கொண்டதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று தான் வேண்டினோம். கிடைத்து கிடைத்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.