தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கொரோனா ஒரு சாதாரண நோய் அல்ல..! எனக்கு முன்னால் மக்கள் மடிவதை காண்கிறேன்..! தயவுசெய்து மக்களே... கவுண்டமணி உருக்கம்!
நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் தற்போது தினசரி கொரோனாவால் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை வேகம் எடுத்துள்ள நிலையில், கடந்த 10-ந்தேதி முதல் வரும் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் மே 24-ந் தேதி முதல் தளர்வுகள் இல்லாத ஒரு வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோவிட் ஒரு சாதாரண நோய் அல்ல. எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை நான் காண்கிறேன். தயவுசெய்து உள்ளே தங்கி தடுப்பூசி அல்லது ஏதேனும் அவசரநிலைக்கு மட்டும் வெளியே வாருங்கள்! pic.twitter.com/0fXTb7MCpb
— Goundamani (@itisGoundamani) May 22, 2021
இந்நிலையில், நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அவரது ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், "கோவிட் ஒரு சாதாரண நோய் அல்ல. எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை நான் காண்கிறேன். தயவுசெய்து உள்ளே தங்கி தடுப்பூசி அல்லது ஏதேனும் அவசரநிலைக்கு மட்டும் வெளியே வாருங்கள்!" என்று மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.