மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜிவி பிரகாஷின் 'அடியே' திரைப்படம் எப்போது ரிலீஸ்? படக்குழு அறிவிப்பு!
ஜிவி பிரகாஷ் நடித்துள்ள அடியே திரைப்படம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக கலக்கி வருபவர் ஜி.வி பிரகாஷ் குமார். என்னதான் இவர் ஹீரோவாக நடித்தாலும், இவருடைய பாடல்களுக்கு தான் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது ஜிவி பிரகாஷ் குமார், இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அடியே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக, கௌரி கிஷன் நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு, மிர்ச்சி விஜய், மதும்கேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டைம் ட்ராவல் கதையை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இதனிடையே கடந்த 8ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் ரிலீஸாகவில்லை. இந்த நிலையில் அடியே திரைப்படம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.