அஜித், ஷாலினியின் இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா..! யாரும் அதிகம் பார்த்திராத புகைப்படம்...
நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி இருவருமே காதலித்து வந்த நிலையில், கடந்த 2000-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அப்போது இப்போது என எப்போதுமே திரைத்துறையில் ரசிகர்களுக்கு பிடித்த பேவரைட் ஜோடியாக இவர்கள் இருவரும் இன்றுவரை இருந்து வருகிறார்கள்.
இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு காதலித்து வந்த காலத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் அஜித் தனது மனைவி ஷாலினியின் மடியில் அமர்ந்திருப்பார். மேலும், அஜித்தை ஷாலினி இறுக்கமாக கட்டி பிடித்துக் கொண்டிருப்பார். இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Throwback : அஜித் ஷாலினி எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்.!#Ajithkumar𓃵 | #Shaliniajithkumar | #ThunivuPongalWinner pic.twitter.com/u9N6CJdtSx
— CineBloopers (@CineBloopers) January 14, 2023
நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான துணிவு திரைப்படம் விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பார்க்க நடிகை ஷாலினியும் தியேட்டர் சென்றுள்ள புகைப்படமும் இணையத்தில் வைரலாகியுள்ளது.