#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சூது கவ்வும்-2 திரைப்படத்தில் இவர்தான் கதாநாயகன்.!
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் தான் சூது கவ்வும். இந்த திரைப்படம் தொடக்கத்தில் இவரை மிகவும் பிரபலப்படுத்தியது.
காமெடியான கதையில் உருவான இந்த திரைப்படத்தில் தான் அசோக் செல்வன் அறிமுகமானார். இந்த சூழ்நிலையில், இந்த திரைப்படத்தை தயார் செய்த திருகுமரன் என்டர்டைன்மென்ட் நிறுவனம் 10 வருடங்களுக்கு பின்னர் இந்த திரைப்படத்தின் 2-ம் பாகத்தை தற்போது தயார் செய்து வருகின்றது. இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த எந்த ஒரு நடிகர்களும் இல்லாமல் முழுக்க, முழுக்க புதிய நபர்களை இந்த திரைப்படத்தில் களமிறக்கியிறது பட குழு.
அதிலும் குறிப்பாக சூது கவ்வும் திரைப்படத்தின் முதல் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் விஜய் சேதுபதிக்கு பதிலாக தற்போது முயற்சி சிவா நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், ராதாரவி, அருள்தாஸ் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அதோடு இந்த திரைப்படத்தை நாடும் நாட்டு மக்களும் என்ற டேக் லைனோடு வெளியிடயிருக்கிறார்கள். தற்போது சூது கவ்வும் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தை எட்டியிருக்கின்ற நிலையில், எதிர்வரும் வருடம் இந்த திரைப்படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டிருக்கிறது என்றும் தெரிகிறது.