திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆதிபுருஷ் படக்குழுவினரை சரமாரியாக விலாசிய உயர் நீதிமன்றம்..
தெலுங்கு திரை உலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் 'பாகுபலி' திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனையடுத்து தற்போது 'ஆதிபுரூஸ்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியானது.
இப்படத்தின் ப்ரமோஷனை வித்தியாசமாக செய்கிறோம் என்ற பெயரில் சிரிப்பை ஏற்படுத்தும் விதமாக படக்குழு நடந்து கொண்டது. மேலும் திரைப்படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இதனையடுத்து திரைப்படத்தை தடை செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டது.
இப்படத்தில் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் கலவரத்தை தூண்டும் விதமாக இருக்கின்றன. மேலும் ராமர், சீதா, அனுமான் போன்றவர்களை சித்தரிக்கப்படும் காட்சிகள் சரியில்லை என்றும் நீதிமன்றத்தில் மனுதாரர் வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து நீதிபதிகள் 'ஆதிபுருஷ்' படக்குழுவினரை சரமாரியாக கேள்விக்கணைகளால் விளாசிதள்ளினர். இப்படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் ஒழுங்கை மீறாமல் நடந்து கொண்டது பெரிய விஷயம். மேலும் ராமர், சீதா, அனுமன் போன்றவர்களை காட்டி விட்டு இது ராமாயணம் இல்லை என்று கூறுவது முட்டாள்தனமாக உள்ளது. திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு மூளை இல்லை என்று நினைத்தீர்களா என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியது உயர்நீதிமன்றம். இச்செய்தி தற்போது தீயாய் பரவி வருகிறது.