மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஷாருக்கானை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகருடன் நெருக்கமாக டிடி!! இது எங்கு தெரியுமா?? வைரல் புகைப்படங்கள்!!
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஏராளமான பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தற்போது இந்திய அளவில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம்வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவரது கலகலப்பான பேச்சிற்கும், சிரிப்புக்கும் என ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது வழங்கும் விழாக்கள், ஆடியோ வெளியீட்டு விழா, பட ப்ரமோஷன் போன்றவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூர் நடிப்பில் 150 கோடி பட்ஜெட்டில் பிராமாண்டமாக உருவான ஷாம்ஷரா படம் ஜூலை 25 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் தொகுப்பாளினியாக கலந்து கொண்ட டிடி நடிகர் ரன்வீர் கபூருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்துள்ளார். அதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.