மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்த சதுரங்க வேட்டை பட இயக்குனர் எச் வினோத்.. எச் வினோத்திற்கு உதவிய மனோபாலா.!
கோலிவுட் திரையுலகின் பிரபல இயக்குனராக இருந்து வருபவர் ஹெச்.வினோத் இவரின் முதல் படமான 'சதுரங்க வேட்டை' படத்திலேயே சினிமா ரசிகர்களை கவர்ந்தவர். எச்.வினோத் ஆரம்ப கால பார்த்திபனிடம் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார்.
உதவி இயக்குனராக இருந்த இயக்குனர் ராஜுமுருகனிடம் 'சதுரங்க வேட்டை' படத்தின் திரைக்கதையை சுருக்கமாக கூறியிருக்கிறார். இக்கதை பிடித்துப்போன ராஜமுருகன் கதை முழுவதுமாக எழுதிவிட்டு தன்னை வந்து பார்க்குமாறு கூறியிருக்கிறார்.
பின்னர் தயாரிப்பாளர் தேடி அலைந்த எச்.வினோத் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் யாரும் முன் வராததால் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். வேலைக்கு சேர்ந்த பிறகு 'கோலி சோடா' பட இயக்குனர் விஜய் மில்டனிடம் இக்கதையை கூறியிருக்கிறார்.
விஜய் மில்டனுக்கு இக்கதை பிடித்துப் போக லிங்குசாமியிடம் அறிமுகப்படுத்தி மனோபாலா தயாரிப்பில் 'சதுரங்க வேட்டை' படம் உருவாகியது. இவ்வாறாக 'சதுரங்க வேட்டை' படம் உருவாக எச். வினோத் பட்ட கஷ்டங்களையும், மனோபாலாவின் மனப்பான்மையும் இயக்குனர் ராஜுமுருகன் பேட்டியில் கூறியிருக்கிறார். இப்பேட்டி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.