மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அன்று இந்த விஷயம் தெரிந்திருந்தால் என் அம்மாவை காப்பாற்றி இருப்பேன்..." விஜய் பட நடிகரின் உருக்கமான பேட்டி !
நடிகர் விஜய் சூர்யா மற்றும் ரமேஷ் கண்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படத்தில் குட்டி விஜயராக நடித்திருப்பவர் பரத் ஜெயந்த். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து வானத்தைப்போல பிரியமான தோழி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்தார். சிறு குழந்தைகள் விரும்பி பார்க்கும் சக்களக்க பூம்பூம் என்ற தொடரிலும் நடித்து பிரபலமானவர்.
சிறிது காலத்திற்கு பின்னாடி போய் விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்தி தொடங்கிய இவர் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்தார். அதனைத் தொடர்ந்து மாடலாக பணியாற்றியவர் இயக்குனர் விக்ரமின் இளமை நாட்கள் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதர்வா நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார்.
தற்போது சினிமாவை விட்டுவிட்டு குட்டி யானையில் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் தொழில் செய்து பிசினஸ் மேனாக வலம்புரிகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கஷ்டமான காலங்கள் குறித்து பகிர்ந்து இருக்கிறார் இவர் . தனது தாயை தந்தை விட்டு விட்டு சென்று விட்டதாகவும் தற்போது தாய் மற்றும் தந்தை இருவருமே இறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இவருடைய தாய்க்கு மாரடைப்பு ஏற்பட்டபோது ஆம்புலன்ஸில் இருந்த டிரைவரும் முதலுதவி கூட செய்யவில்லை என்றும் அந்த உதவியை செய்து இருந்தால் தனது அம்மா பிழைத்திருப்பார் என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார். தனக்கு இப்போது முதலுதவி செய்வதற்கு தெரியும் என்றும் தெரிவித்தார். அன்றே இது தெரிந்திருந்தால் என் தாயை நான் காப்பாற்றி இருக்கலாம் எனவும் வருத்தத்துடன் கூறினார்.