மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எல்லாம் இறைவன் பார்த்துப்பான்... ஜெயம் ரவியின் ஒற்றை நம்பிக்கை பலிக்குமா.!
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான கதாநாயகனாக வலம் வருபவர் ஜெயம் ரவி. தனது ஆரம்ப கால திரைப்படங்களில் சாக்லேட் பாயாக வளர்ந்து வந்த இவர் தனி ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படத்தை அவரது அண்ணன் ராஜா இயக்கியிருந்தார். தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட உள்ளது.
சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அகிலன் திரைப்படம் விமர்சன மற்றும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. இவரது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வசூலில் சாதனை செய்திருந்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
இந்நிலையில் இவரது நடிப்பில் உருவாகி ரிலீஸ் ஆக தாமதமாக இருந்த திரைப்படங்கள் தற்போது வெளிவர இருக்கின்றன. அந்த வரிசையில் இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் இறைவன் திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஜெயம் ரவிக்கு வெற்றியை கொடுக்கும் என திரைத்துறையினர் எதிர்பார்த்து உள்ளனர்.