மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஷாக் நியூஸ்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகளை திருடி., 4 ஆண்டுகளாக சிறுக சிறுக சொத்துக்களை வாங்கிய பணிப்பெண்..!
வேலைபார்த்து வந்த இடத்தில் 5 ஆண்டுகளாக நகைகளை திருடி வந்த பெண்மணி, தனது பெயரில் சொத்துக்கள் வாங்கி சிக்கிக்கொண்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் கோவா, 3 உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது லால் ஸலாம் படத்தை இயக்கவுள்ளார்.
நேற்று தனது வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகைகள், வைரம், நவரத்தின கற்கள் ஆகியவை மாயமாகிவிட்டன என தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
2019ல் இருந்து 3 வீடுகள் மாறியும் லாக்கர் திறக்கப்படவில்லை. ஆனால், லாக்கரில் இருந்த நகைகள் குறித்த விபரம் வீட்டில் பணியாற்றி வரும் பணியாட்களுக்கு தெரியும் என புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், அவரின் வீட்டில் பணியாற்றி வந்த ஈஸ்வரி என்ற பெண்மணி நகைகளை சிறுகசிறுக வாங்கி சொத்துக்களை வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளன.