#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அஜித்தின் அடுத்த படத்தில் இணையும் பிரபல நடிகையின் மகள். யார் தெரியுமா?
விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் தல அஜித். ஹிந்தியில் மாபெரும் வெற்றிபெற்ற இந்த படம் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் தயாரிப்பில், அஜித், வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் தமிழில் உருவாகிறது.
ஹிந்தியில் இல்லாதா வகையில் தமிழில் வித்யாபாலனுக்காக கதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாம். மேலும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மூன்று பெண்கள் உள்ளனர். ஹிந்தியில் நடிகை தாப்ஸி கதாபாத்திரத்திற்கு தமிழில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அதிகாரபூர்வமாக அரவிக்கப்பட்டுள்ளார்.
மற்ற இருவர் பற்றி எதுவம் செய்தி வெளிவராத நிலையில், ஒரு கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை நடிக்கவைக்கலாம் என அஜித் கூறியதாகவும், அதை இயக்குனர், தயாரிப்பாளரும் ஜான்வியின் தந்தையுமான போனிகபூரிடம் கூற அவர் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.
இந்தியில் ‘ததக்’ என்ற வெற்றிப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஜான்வி கபூர் அஜீத்தின் தீவிர ரசிகையாம். தனது மகளின் தமிழ்ப்பட எண்ட்ரி குறித்து போனிகபூர் விரைவில் அறிவிப்பார் என செய்திகள் தெரிவிக்கின்றன.