மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
10 வருடங்களுக்கு பிறகு முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் நடிகை நயன்தாரா... யார் அவர் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்மையில் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றனர்.
திருமணத்திற்கு பிறகும் நடிப்பை விடாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. தற்போது இயக்குனர் அட்லீயின் ஜவான் திரைப்படத்தில் சாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நயன்தாரா 75 வது படம் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது நிலேஷ் கிருஷ்ணா இயக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிகர் ஜெய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. இருவரும் 10 வருடங்களுக்கு முன் ராஜா ராணி திரைப்படத்தில் நடித்திருந்தனர். ராஜா ராணி திரைப்படம் சூப்பர் ஹூட் அடித்ததை போல் நயன்தாரா 75 படமும் சூப்பர் ஹூட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.