மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. நடிகர் ஜெய்க்கு விரைவில் திருமணமா?? அவசரமாக நடைபெறும் ஏற்பாடுகள்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஜெய். இவர் சுப்ரமணியபுரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பெற்றார். ஜெய் தற்போது காபி வித் காதல் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. ஜெய் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கக்கூடியவர். அவர் அஞ்சலியை காதலிப்பதாகவும், ஜெய் அவரை திருமணம் செய்யப் போவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் சில காரணங்களால் அவர்களது காதல் பாதியிலேயே முறிந்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் ஜெய் மற்றும் வாணி போஜன் இருவரும் லிவிங் டுகெதரில் இருப்பதாக தகவல்கள் பரவியது. ஆனால் அந்த சர்ச்சைகளுக்கு வாணி போஜன் மறைமுகமாக முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் தற்போது நடிகர் ஜெய்க்கு அவரது வீட்டில் பெண் பார்த்து வருவதாகவும் அவரது சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரது பெரியப்பாவும், இசையமைப்பாளருமான தேவா அவருக்கு பெண் பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.