தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்; விபரம் உள்ளே.!
ஹாலிவுட்டின் முக்கிய திரைப்பட இயக்குனர்களில், சர்வதேச அளவில் புகழ்பெற்றவர் ஜேம்ஸ் கேமரூன். இவரின் இயக்கத்தில் வெளியான பிராணா, தி டெர்மினேட்டர், ஏலியன், டெர்மினேட்டர் 2, டைட்டானிக், அவதார், அவதார் தி வே ஆப் வாட்டர் ஆகிய படங்கள் சர்வதேச அளவில் வரவேற்பை பெற்று இருக்கின்றன.
2025ல் அவதார் 3ம் பாகமும், 2029ல் அவதார் 4ம் பாகமும் கேமரூனின் இயக்கத்தில் வெளியாகவிருக்கின்றன. கடந்த 1978ல் தொடங்கிய கேமரூனின் திரை வாழ்க்கை, இன்று வரை வெற்றிகரமாக தொடங்கி வருகிறது.
இந்நிலையில், 51வது Saturn Awards நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜேம்ஸ் கேமரூனிடம், செய்தியாளர் ஒருவர் ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து கேட்டார். அப்போது பேசிய கேமரூன், "நான் மனதார அப்படக்குழுவுக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன். ஆர்ஆர்ஆர் திரைப்படம் இந்திய சினிமாவின் முக்கிய அடையாளம். உலகளவில் வரவேற்பை பெற்ற அப்படம், எப்படத்துடனும் ஒப்பிட இயலாதது" என கூறினார்.
கடந்த 24 மார்ச் 2022 அன்று வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை ராஜமௌலி இயக்கி வழங்கினார். கீரவாணி இசையமைப்பில், நடிகர்கள் ராம் சரண், என்.டி. ராமா ராவ், அஜய் தேவ்கன், ஆலியா பட், ரேவ் ஸ்டீவன்சன் உட்பட பலரும் நடித்து இருந்தனர். ரூ.550 கோடி செலவில் உருவான படம், ரூ.1000 கோடியை கடந்து பாக்ஸ் ஆபிசில் மட்டும் வசூல் சாதனை செய்தது. உலகளவில் ஜப்பானியம் உட்பட பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
சதுரன் விருதுகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படங்களுக்கு வழங்கப்படும் விருதுகள் ஆகும்.
James Cameron Praises @SSRajamouli & #RRRMovie On The Red Carpet At The 51st Annual @SaturnAwards 🔥🌊
— trendy tolly (@trendytollyPR) February 7, 2024
The Global Reach Of @RRRMovie is Unmatchable….@tarak9999 @alwaysramcharan @dvvmovies pic.twitter.com/l3w6U2Akoz