ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் தொலைக்காட்சி வெளியீடு உரிமையை கைப்பற்றியது சன் டிவி..!

ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், பைவ் ஸ்டார் கிரியேஷன் நிறுவனங்களின் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இயக்கத்தில், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா, சத்யன், அரவிந்த் ஆகாஷ், பாவா செல்லத்துரை உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (Jigarthanda Double X).
இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த 2014ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வெளியாகி, பட்டிதொட்டியெங்கும் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி அடைந்த ஜிகிர்தண்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி உரிமைகளை தமிழில் சன் தொலைக்காட்சியும், தெலுங்கில் ஜெமினி தொலைக்காட்சியும், மலையாளத்தில் சூர்யா தொலைக்காட்சியும், கன்னடத்தில் உதயா தொலைக்காட்சியும் கைப்பற்றியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியிலும் வெளியிடப்படுகிறது.