#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்பா.. பாலிவுட் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்குறாரே! கவர்ச்சியில் கலக்கும் ஜோனிடா காந்தி!!
தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஓ காதல் கண்மணி படத்தில் மெண்டல் மனதில் பாடலை பாடியதன் மூலம் அறிமுகமாகி தனது முதல் பாட்டிலேயே அனைவரையும் கவர்ந்தவர் ஜோனிடா காந்தி. அதனை தொடர்ந்து அவர் அச்சம் என்பது மடமையடா, காற்று வெளியிடை, வேலைக்காரன் போன்ற படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா செல்லம்மா பாடலை பாடியிருந்தார். இதன் மூலம் அவர் பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பீஸ்ட் படத்தில் அவர் பாடிய அரபிக்குத்து பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.
அவர் தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் கன்னடம் மொழியிலும் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். மேலும் அவர் தற்போது ஹீரோயினாகவும் அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில் கவர்ச்சிக்கு தாவிய ஜோனிடா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வாறு அவர் தற்போதும் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.