#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அனிருத்தை தான் திருமணம் செய்வேன்! மேடையில் ஓபனாக போட்டுடைத்த பிரபல இளம்பாடகி! அட.. யார்னு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மிகவும் பிஸியாக வலம் வருபவர் அனிருத். தனது துள்ளலான இசையால் அவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளார். அனிருத் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான பீஸ்ட், காத்து வாக்குல ரெண்டு காதல், டான் மற்றும் தற்போது கமல் நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் அனிருத்தின் திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவும். அண்மையில் கூட கீர்த்தி சுரேஷும், அனிருத்தும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் அவை பொய் என்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பாடகி ஜோனிடா காந்தி சமீபத்தில் விருது விழாவில் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.
அண்மையில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட பாடகி ஜோனிடாவிடம், ரன்வீர் சிங், சூர்யா, அனிருத் இவர்கள் மூவரில் யாரை திருமணம் செய்துகொள்வீர்கள் என கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் இவர்களில் அனிருத்தான் திருமணமாகாமல் உள்ளார். அதனால் அவரைதான் திருமணம் செய்துகொள்வேன் என கூறியுள்ளார். அவர் கூறியது வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு இருவரும் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர். மேலும் இருவரும் சில ஆண்டுகளாக காதலிப்பதாகவும் கூட தகவல்கள் பரவியது.