மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜோதிகாவுக்கும் அந்த நடிகைக்கும் சண்டையா.? கிசுகிசுக்கும் கோலிவுட்.!
கோலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகி ஜோதிகா. தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார். இவர் முதன்முதலில் 1999ஆம் ஆண்டு வெளியான வாலி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதன்பின் கதாநாயகியாக பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, முகவரி, ரிதம், டும் டும்டும்,சந்திரமுகி, பேரழகன், சில்லுனு ஒரு காதல், வேட்டையாடு விளையாடு, மொழி, 36வயதினிலே, காற்றின் மொழி போன்ற ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.
இவ்வாறாக, திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் போதே நடிகர் சூர்யாவை காதலித்து 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதற்கு பிரேக் எடுத்துகொண்ட ஜோதிகா தற்போது தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.
இதுபோன்ற நிலையில், த்ரீ ரோசஸ் படத்தில் நடித்த ஜோதிகா, லைலா மற்றும் ரம்பா போன்றோர் நடித்திருந்தனர் இதில் ரம்பா கடன் வாங்கி படத்தை தயாரித்தார். இதன்படி படப்பிடிப்பின் போது ஜோதிகாவுக்கும் ரம்பாவுக்கும் நடந்த சண்டையால் படபிடிப்பு தடைபட்டு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ரிலிஸாகி படம் தோல்வியடைந்தது. இதனால் பெரும் இழப்பு ரம்பாவுக்கு ஏற்பட்டது என்று கோலிவுட் வட்டாரங்கள் பேசிவருகின்றனர்.