மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படத்தின் வெற்றிக்கு வசூல் முக்கியமில்லை.. அஜித்துக்கு ஆதரவாக குதித்த காயத்ரி.!
பாலிவுட் சினிமாவில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் பிங்க். இதனை தமிழில் ரீமேக் செய்து நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் வெளியாகிறது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் வினோத் இயக்க, அஜித்குமார் நடித்திருந்தார். இந்த திரைப்படம் குறைந்த வசூல் செய்திருந்தாலும், விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த நிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி 4 ஆண்டுகள் கடந்த நிலையில் விமர்சகர் ஒருவர் மேற்கொண்ட பார்வை படத்தில் நடித்தது அஜித் எடுத்த தவறான முடிவு என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி தரும் விதமாக நடிகை காயத்ரி, ஒரு படத்தில் வெற்றி வசூல் எனும் அளவுகோலை தாண்டி சமூகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் பொறுத்து இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக இந்த சமூகத்தில் விவாதிக்க வேண்டிய ஒரு விஷயத்தை இந்த படம் மூலம் அஜித் துவங்கி வைத்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.