#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இரத்த கரையுடன் வெளியான கார்த்தி நடிக்கும் கைதி படத்தின் பர்ஸ்ட் லுக்! செம மாஸ்!
தேவ் படத்தை அடுத்து கைதி என்ற படத்தில் நடித்துவருகிறார் கார்த்தி. தேவ் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. இந்நிலையில் மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் இயக்கத்தில் தற்போது கைதி படத்தில் கார்த்தி நடித்துவருகிறார். படப்பிடிப்பு வேலைகள் தொடங்கி விரைவாக நடைபெற்றுவருகிறது.
ஹீரோயின், ரொமான்ஸ், டூயட் இல்லாமல் உருவாகும் இந்த படம் ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது. படத்தில் கார்த்தி கைதியாக நடிப்பதாகவும், அதற்காத்தான் கைதி என பெயர் வைத்துள்ளதாகவும் செய்துள் வெளியானது.
இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கார்த்தி வெளியிட்டுள்ளார். இரத்தம் சொட்ட சொட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வித்தியாசமாக உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர். தற்போது அந்த புகைப்படம் வைரலாகிவருகிறது.
First look of #கைதி.
— Actor Karthi (@Karthi_Offl) March 8, 2019
A full fledged action thriller. Happy to be working with a lot of good actors and technicians. #Kaithi #KaithiFirstLook @itsNarain @Dir_Lokesh @sathyaDP @SamCSmusic pic.twitter.com/zEVJmdQ5hl