மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தங்க சிலையாக மாறிய காஜல் அகர்வால்.. ஹார்டுகளை பறக்கவிட்ட ரசிகர்கள்.!
2008ம் ஆண்டு " பழனி"என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால், முதன் முதலில் ஹிந்திப் படத்தில் தான் அறிமுகமானார். இவரது தங்கை நிஷா அகர்வாலும் ஒரு நடிகை தான்.
ஆரம்பத்தில் காஜல் அகர்வால் நடித்த படங்கள் சரியாகப் போகாத நிலையில், தெலுங்கில் இவர் ராம் சரண் தேஜாவுடன் நடித்த "மகதீரா" படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதோடு இந்தப்படம் தமிழில் "மாவீரன்" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
தொடர்ந்து தமிழ் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என்று முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள காஜல், 2020ம் ஆண்டில் தொழிலதிபர் கௌதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
சமூகவலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடும் காஜல், தற்போது தங்க நிற சேலையில், ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அம்மாவாகியும் இளமையாக உள்ளார் என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.