அட.. காக்கா முட்டை பட சிறுவர்களா இது..? மீசை, தாடி.. ஹீரோ ரேஞ்சுக்கு மாறிய சிறுவர்கள்.. வைரல் புகைப்படம்
காக்கா முட்டை படத்தில் நடித்த இரண்டு சிறுவர்களின் தற்போதைய புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது.
கடந்த 2014ம் ஆண்டில் வெளிவந்த காக்கா முட்டை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. இந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இந்த படம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் நல்ல புகழை ஏற்படுத்தி தந்தது.
அதேபோல் இந்த படத்தில் மிக முக்கிய வேடத்தில் பெரிய காக்கா முட்டை, சிறிய காக்கா முட்டை என்ற கதாபாத்திரத்தில் விக்னேஷ், ரமேஷ் என்ற இரண்டு சிறுவர்கள் நடித்திருந்தனர். இவர்கள் இருவரின் கதாபாத்திரமும், நடிப்பும் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்றே கூறலாம்.
அந்த அளவிற்கு இரண்டு சிறுவர்களும் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் காக்கா முட்டை படம் வெளியாகி தற்போது 6 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளநிலையில் இந்த படத்தில் சிறுவர்களாக நடித்த அந்த இரண்டு சிறுவர்களின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
அழுக்கான சட்டை, மேக்கப் இல்லாத தோற்றம் என மிகவும் சாதாரணமாக அந்த படத்தில் நடித்திருந்த அவர்கள் தற்போது நீளமான முடி, மீசை, தாடி என ஹீரோ ரேஞ்சுக்கு மாறியுள்ளனர். நீங்களே அந்த காட்சியை பாருங்கள்.
1 . பெரிய காக்கா முட்டை (விக்னேஷ்)
2 . சின்ன காக்கா முட்டை (ரமேஷ்)