மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பயில்வானை கேள்விகளால் விளாசிதள்ளிய காத்துகருப்பு கலை..
பாக்யராஜின் "முந்தானை முடிச்சு" படத்தில் மருத்துவராக நடித்து அறிமுகமானவர் பயில்வான் ரங்கநாதன். இவர் தற்போது நடிகர், யூட்யூபர், சினிமா பத்திரிக்கையாளர், சினிமா விமர்சகர் என்று பல்துறை வித்தகராக இயங்கி வருகிறார்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் அதிகம் அறியப்பட்ட நபரான காத்து கருப்பு, பயில்வான் ரங்கநாதனிடம் ஒரு பேட்டி எடுத்துள்ளார். அப்போது கருப்பு பயில்வானிடம் நிறைய கேள்விகளைக் கேட்டுள்ளார்.
அதில்,"யாருக்குமே தெரியாத விஷயத்தை நீங்க எப்படி சொல்றீங்க? அதுவும் நடிகைகளை பற்றி நீங்கள் கூறுவது பக்கத்தில் இருந்து பார்த்தது போல் சொல்கிறீர்களா?" என்று கருப்பு கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பயில்வான் ரங்கநாதன், "நான் அவர்கள் சொல்லும் செய்திகளைத் தான் கூறுகிறேன்.
நான் கற்பனையாக எந்த செய்தியும் சொல்லவில்லை. நான் பேசுவதில் நூற்றில் இருபது தான் இப்படிப்பட்ட செய்திகளாக இருக்கும். இவருடன் டேட்டிங் சென்றேன், இவர் என்னை படுக்கைக்கு அழைத்தார் என்று நடிகைகள் சொல்வதை தான் நான் கூறுகிறேன்" என்று மீண்டும் சர்ச்சையாக பேசினார்.