பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விஜய் சேதுபதி, சூரி, பிரபுதேவாவுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு.!
திரைத் துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2011 முதல் 2018 வரை அறிவிக்கப்பட்டுள்ள விருது பட்டியலில் விஜய் சேதுபதி, சூரி, பிரபு தேவா, சசிக்குமார் உள்ளிட்ட பல கலைஞர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.
2015ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெரும் கலைஞர்களின் பெயர் பட்டியலில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, நடிகர் பிரபுதேவா, பாடலாசிரியர் யுகபாரதி, ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு ஆகிய 20 பேர் இடம் பெற்றுள்ளனர்.
2016ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள் பட்டியலில் சூரி, நடிகர் சசிகுமார், தம்பி ராமையா, எம்எஸ் பாஸ்கர், பத்திரிகையாளர் நெல்லை சுந்தரராஜன், சமய சொற்பொழிவாளர் ராஜகோபாலன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளார்கள்.
2017ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள் பட்டியலில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் ஹரி, நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, நடிகை பிரியாமணி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட மொத்தம் 28 பெயர்கள் இடம்பெற்றுள்ளது.