மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சண்டை போட காரணம் இருக்க வேண்டும்..." மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல் ஹாசன்.!
உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாமன்னன். இந்த திரைப்படத்தில் ஃபகத் பாஸில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு உலக நாயகன் கமல்ஹாசன் இயக்குனர் பா. ரஞ்சித் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாமன்னன் திரைப்படம் இந்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய கமல்ஹாசன் சமூக நீதி தொடர்பான உரையாடல்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என பேசினார். இது போன்ற திரைப்படங்கள் இந்தியா முழுவதும் வெளியாக வேண்டும் என்றும் தனது ஆசையை கூறினார்.
சண்டை போடுவதற்கு ஒரு நியாயம் வேண்டும் அந்த நியாயம் மாறி செல்வராஜிடம் இருப்பதாக அவர் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருந்தாலும் இந்த திரைப்படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் தான் கதையின் நாயகனாக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.