மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"என்னை விலைக்கு வாங்க பல கோடிகள் பேரம் பேசினர்" பேட்டியில் உண்மையை கூறிய கங்கனா ரனாவத்.!
2006ம் ஆண்டு முதல் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த கங்கனா, அடைப்படையில் ஒரு மாடல் அழகி ஆவார். "கேங்ஸ்டர்" படத்தில் நடித்து சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார். தமிழில் ஜெயம் ரவி நடித்த "தாம் தூம்" திரைப்படத்தில் அறிமுகமானார்.
இந்நிலையில் சத்தீஸ்கரைச் சேர்ந்த சவுரப் சந்த்ரகரும், அவரது நண்பர் ரவி உப்பாலும் இணைந்து துபாயில் "மகாதேவ்" என்ற சூதாட்ட செயலியை உருவாக்கினர். இதில் பல விளையாட்டுக்களின் பெயரில் சூதாட்டம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 260கோடி செலவில் சவுரப்பின் திருமணம் துபாயில் நடந்தது.
அப்போது, பாலிவுட் நடிகர் நடிகைகளுக்கு ஹவாலா முறையில் பணம் கைமாறியதாக கூறப்பட்டது. கடந்த செப்டம்பரில் சவுரப் அளித்த விருந்தில் கலந்துகொண்ட நடிகர்களுக்கு தலா 40கோடி அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மகாதேவ் செயலி மூலம் 5000கோடி மோசடி நடந்துள்ளதால், பல பாலிவுட் நடிகர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய கங்கனா, " இந்த செயலியில் இருந்து என்னை விலைக்கு வாங்க பல கோடிகள் பேரம் பேசினர். நான் மறுத்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.