மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புஷ்பா படத்தை முந்திய சூப்பர் ஹிட் திரைப்படம்.! பாக்ஸ் ஆபிஸில் படைத்த வசூல் சாதனை.! கொண்டாடும் ரசிகர்கள்!!
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் “புஷ்பா”. இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மர கடத்தலை மையமாக கொண்டு இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்து பெரும் வசூல் சாதனை படைத்தது.
அதாவது புஷ்பா திரைப்படம் வெளிவந்து உலகளவில் சுமார் ரூபாய் 350 கோடி வரை வசூல் செய்தது. மேலும் புஷ்பா இரண்டாம் பாகமும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் காந்தாரா. இந்த படம் புஷ்பா திரைப்படத்தை முந்தி வசூல் சாதனை படைத்து வருகிறது.
அதாவது புஷ்பா திரைப்படம் இதுவரை 350 வசூல் செய்த நிலையில் காந்தாரா திரைப்படம் 43 நாட்களில் ரூபாய் 359 கோடி வசூல் சாதனை படைத்து பாக்ஸ் ஆபிஸில் முந்தி சென்றுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.