மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காந்தாரா 3 திரைப்படம் ரெடி.. இயக்குனர் கொடுத்த அப்டேட்!
பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனையடுத்து தற்போது காந்தாரா 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி காந்தாரா 2 படப்பிடிப்பின் போதே, மூன்றாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் காந்தாரா 3 திரைப்படம் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், காந்தரா படத்தின் முதல் பாகத்தை விட அடுத்தடுத்து வரும் பாகங்கள் மிக பிரம்மாண்டமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இந்த திரைப்படங்கள் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது.