மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மொத்தமும் அழிஞ்சுடும், கவனமா இருங்க! பொதுமக்களுக்கு நடிகர் கார்த்தி வேண்டுகோள்! வைரலாகும் வீடியோ!!
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள மரங்கள், மூலிகைகள் தீயில் கருகி நாசமாகின. மேலும் வன விலங்குகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காட்டுத்தீயை அணைக்க வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் காட்டுத்தீ குறித்து நடிகர் கார்த்தி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், கோடை வெயிலுக்கு இதமளிக்கும் கடவுள் தந்த வரம்தான் கொடைக்கானல். குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் அது ஒரு கனவு பிரதேசம். ஏராளமான பறவைகள், விலங்குகள், தாவரங்கள் அங்குள்ளது.
ஒரு சின்ன தீப்பொறி பட்டால் கூட காடுகளுடன் சேர்ந்து மரங்கள், பறவைகள், வனவிலங்குகள் போன்றவைகளும் அழிந்துபோகும் அபாயம் உள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். காட்டுத்தீக்கு எதிரான இந்த போரில் வனத்துறையுடன் இணைந்து நாமும் காடுகளை காப்போம் என கூறியுள்ளார்.