மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கார்த்தியின் ஜப்பான் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? படக்குழு அறிவிப்பு.!
கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான கார்த்தி, இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்களில் வெளியாகியது. இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் படுதோல்வியை சந்தித்தது.
இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், முதல் நாளிலேயே படுதோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் ஜப்பான் திரைப்படம் வரும் டிசம்பர் 11ம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.