மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கார்த்தியின் அடுத்த படத்தின் அசத்தல் அப்டேட்.. வைரலாகும் வீடியோ!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. தற்போது இவர் 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
கிராமத்து கதை களத்தில் உருவாகும் இந்த படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. மேலும், இந்த படத்துக்கு 'மெய்யழகன்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Delighted to share the pooja ceremony video of our #ProductionNo27 🌟
— Studio Green (@StudioGreen2) March 8, 2024
🔗 https://t.co/V2RqlPV1xd#Karthi26 First Look & Title Soon ⏳
Written & Directed by #NalanKumarasamy 💥@Karthi_Offl #StudioGreen @GnanavelrajaKe @NehaGnanavel @Dhananjayang @agrajaofficial @proyuvraaj… pic.twitter.com/026bI1nKjF
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நலன் குமார் சாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 ஆகிய திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பூஜை வீடியோவை தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.