மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
500 நாட்களை கடந்து ரூ.10க்கு காய்கறி பிரியாணி வழங்கும் நடிகர் கார்த்திக்கின் ரசிகர்கள்; ஏழை-எளிய மக்களின் பசியை ஆற்றி மாபெரும் அறம்.!
தமிழ் திரையுலகில் மூத்த நடிகர் சிவகுமாரின் மகனும், இன்றைய உச்ச நத்திரங்களில் ஒருவராகவும் இருப்பவர் கார்த்திக் சிவகுமார். தமிழில் முன்னணி நடிகராக வளமவ்வரும் அவர், விவசாயம் மற்றும் ஏழை-எளிய மக்களுக்கு தனது நற்பணி மன்றம் வாயிலாக உதவி என தொண்டுகளையும் செய்து வருகிறார்.
சமீபத்தில் சென்னை மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மழைவெள்ளத்தின்போது கூட தனது நற்பணி மாற்றத்தின் வாயிலாக உதவிப்பணிகளை செய்து இருந்தார்.
சென்னையில் கடந்த 500 நாட்களுக்கு முன்னதாக அவர் தனது நற்பணி மன்றத்தின் வாயிலாக ரூ.10 க்கு காய்கறி பிரியாணி வழங்கி பலரின் பசியை போக்க காரணமாக இருந்தார். ரூ.10 க்கு காய்கறி பிரியாணி வழங்கும் கடை திறந்து 500 நாட்கள் கடந்துவிட்டன. இதுகுறித்த தகவல் தற்போது பலரிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
வளசரவாக்கத்தில் உள்ள ராமாபுரம் சாலையில் மக்கள் நல உணவகம் நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.