மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாற்றம் நிகழுமா! அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு பிரபல நடிகை அறிவுரை
சமீபகாலமாக ட்விட்டரில் தமிழக இளைஞர்கள் தங்களுக்கு பிடித்தமான திரை பிரபலங்களை ஆதரித்து பேசுவதும், பிடிக்காதவர்களை தரக்குறைவாக பேசியும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
ஒன்றுக்குமே உதவாத பல விசயங்களை இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆக்கி விடுகின்றனர். இதனால் பல முக்கியமான நிகழ்வுகளைப் பற்றிய சிந்தனையும், எண்ணங்களும் அவர்களுக்குள் எழுவதில்லை.
நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும் வெறும் சினிமா பிரபலங்களை பற்றி மட்டுமே பேசி நேரத்தை வீணாக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை இங்கு அதிகமாகி வருகிறது. தமிழக இளைஞர்களை ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவிடாமல் இதைப் போன்ற சிறிய விசயங்களிலே கவனத்தை செலுத்துவது பலருக்கும் வருத்தத்தை அளித்துள்ளது.
இந்நிலையில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு நடிகை கஸ்தூரி அறிவுரை கூறியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "நெகடிவ் விஷயங்களுக்கு இவ்வளவு மெனக்கெடும் தல அஜித் தளபதி விஜய் ரசிகர்கள் அந்த நேரத்தையும் முயற்சியையும் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தினால் ஊர் உங்களையும் வாழ்த்தும், உங்கள் அபிமான நட்சத்திரத்தையும் வாழ்த்தும்" என பதிவிட்டுள்ளார்.
நெகடிவ் விஷயங்களுக்கு இவ்வளவு மெனக்கெடும் தல அஜித் தளபதி விஜய் ரசிகர்கள் அந்த நேரத்தையும் முயற்சியையும் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தினால் ஊர் உங்களையும் வாழ்த்தும், உங்கள் அபிமான நட்சத்திரத்தையும் வாழ்த்தும்.
— Kasturi Shankar (@KasthuriShankar) July 29, 2019