கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
என்ன ஒரு துணிச்சல்!! ரஜினியை வம்புக்கு இழுக்கும் நடிகை
அரசியலுக்கு வருவதை உறுதிபடுத்திய பிறகும் நாட்டில் நடக்கும் சில விசயங்களுக்கு கருத்து கூறுவதை மறுத்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இதனை வலியுறுத்தி நடிகை கஸ்தூரி ரஜினிக்கு எதிராக 'தவறு நடக்கையில் பேசாமலிருப்பதும் தவறுதான்' என்று ட்வீட் செய்துள்ளார்.
நடிகை கஸ்தூரி ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர் மேலும் ராசாத்தி வரும் நாள், சின்னவர், செந்தமிழ்ப் பாட்டு, அமைதிப்படை போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த பிறகு தமிழகத்தில் நடக்கும் சில விஷயங்களுக்கு மட்டும் கருத்து கூறி வருகிறார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு சம்பவத்தில் பாதிக்கபட்டவர்களை சந்தித்த பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினி , சமூக விரோதிகள் போராட்ட களத்தில் ஊடுருவினர் எனவும் இப்படியே போராட்டம் செய்தால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் எனவும் கூறி சர்சையில் சிக்கினார்.
அதேபோல தூத்துக்குடி ஏர்போர்ட்டில் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை பார்த்து பாசிக பாஜக ஒழிக என கோஷமிட்ட ஷோபியா என்ற ஆராய்ச்சி மாணவி கைது செய்ய பட்டு பிறகு ஜாமீனில் விடுதலை செய்யபட்டார். அதுகுறித்து கருத்து கூற சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் மறுத்துவிட்டார்.
இதனை குறிப்பிடும் வகையில் நடிகை கஸ்தூரி ரஜினியை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
ஊரே விவாதிக்கும் விஷயத்தில் ரஜினி மட்டும் கருத்து சொல்ல ஏன் இவ்வளவு தயங்க வேண்டும்?
— Kasturi Shankar (@KasthuriShankar) September 6, 2018
தவறு நடக்கையில் பேசாமலிருப்பதும் தவறுதான். #MemeKast #Rajini pic.twitter.com/YZooptu8Wh