மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் டிவி காற்றின் மொழி சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை இவர்தானா? வைரலாகும் கியூட் ஜோடியின் புகைப்படம்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர் காற்றின் மொழி. இந்த தொடரில் சஞ்சீவ் மற்றும் பிரியங்கா இருவரும் முதன்மை கதாபாத்தித்தில் ஹீரோ, ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.
மேலும் இந்த தொடரில் ஹீரோயின் கண்மணிக்கு ஆதரவாக, நெருங்கிய தோழி ரோஸியாக நடித்து வந்தவர் வைஷ்ணவி ராஜசேகர். இவர் தனது நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார்.
இந்த நிலையில் வைஷ்ணவி ராஜசேகர் சாய் விக்னேஷ் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இருவருக்குமிடையே சமீபத்தில் கோலாகலமாக திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றுள்ளது. அத்தகைய புகைப்படங்களை வைஷ்ணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.