ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
"என்னை கல்யாணம் செய்து கொள்" ரசிகரின் தொடர் தொல்லையால் கீர்த்தி சுரேஷ் எடுத்த அதிரடி முடிவு.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் பல திரைப்படங்கள் நடித்து வருகிறார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
தமிழில் முதன் முதலில் 'இது என்ன மாயம்' எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார். இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இருந்தபோதிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக திரையில் கலக்கி வந்தார்.
இதனையடுத்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வடிவேலு முக்கிய கதாபாத்திரங்கள் நடித்து வரும் 'மாமன்னன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்று பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தன. இப்படம் விரைவில் திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இது போன்ற நிலையில், தற்போது ஒரு பேட்டியில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ், ரசிகரின் தொல்லை குறித்து பேட்டியில் பேசினார். அவர் கூறியதாவது, "ரசிகர் ஒருவர் என்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டி என் அம்மா வீட்டிற்கு வந்து மிகவும் தொல்லை செய்தார். இதனையடுத்து நான் உதயநிதியிடம் தனிப்பட்ட முறையில் கூறி நடவடிக்கை எடுக்க சொல்லியிருந்தேன். இந்த பிரச்சனை என்னால் மறக்கவே முடியாது" என்று அந்த பேட்டியில் பேசியிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.