ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
அட்லியின் மனைவி பிரியாவிற்கும் கீர்த்தி சுரேஷிற்க்கும் இப்படியொரு உறவா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.?

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் அட்லி. இவர் இயக்கத்தில் ராஜா ராணி, மெர்சல், தெறி போன்ற திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றியடைந்தன. இதனையடுத்து அட்லி தற்போது பாலிவுட்டில் திரைப்படம் இயக்கியிருக்கிறார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது. இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா பிரியாமணி போன்ற தமிழ் திரையுலக நடிகர்கள் முதன்முதலாக பாலிவுட்டில் நடித்துள்ளனர்.
இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நிலையில், பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ், அட்லி இயக்கிய 'ஜவான்' திரைப்படத்தில் பிரபல பாடலுக்கு அட்லியின் மனைவி பிரியாவுடன் நடனமாடியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அட்லியின் மனைவி பிரியாவும், கீர்த்தி சுரேஷும் நண்பர்களா என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.