மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேற லெவலில் கெத்து காட்டும் கேஜிஎஃப் 2! உலகளவில் படைத்த மாபெரும் சாதனை!!
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் கேஜிஎஃப் 2. இதன் முதல்பாகம் 2018ஆம் ஆண்டு வெளிவந்து பிரமாண்ட வரவேற்பு பெற்று செம ஹிட்டான நிலையில், அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது.
கேஜிஎஃப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன், சஞ்சய் தத், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பான் இந்தியா படமான கேஜிஎஃப் 2 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்து வருகிறது.
கேஜிஎப் 2 திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 100 கோடி வசூலை அள்ளிய நிலையில் தற்போது படம் வெளியாகி இரு வாரங்களில் உலக அளவில் 1,000 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி மாபெரும் சாதனைப் படைத்து வருகிறது. இந்தியாவில் ரூ.1,000 கோடி வசூலித்த நான்காவது படம் என்ற சாதனையை கேஜிஎஃப் 2 படைத்துள்ளது. இதற்கு முன்னர் டங்கல், பாகுபலி, ஆர்ஆர்ஆர் ஆகிய படங்கள் 1000கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.