தியேட்டரையே தெறிக்கவிட்ட மாஸ் டயலாக்குகள்! கேஜிஎஃப் 2 படத்தின் வசனகர்த்தா இந்த நடிகரா??
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் தற்போது வெளிவந்த திரைப்படம் கேஜிஎஃப் 2. இதன் முதல்பாகம் மாபெரும் வரவேற்பு பெற்று செம ஹிட்டான நிலையில், அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது. கேஜிஎஃப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன், சஞ்சய் தத், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் வசூலை வாரி இறைத்து வருகிறது. ரசிகர்களால் பெருமளவில் கொண்டாடப்பட்டு வரும் கேஜிஎஃப் 2 படத்தில் இடம்பெற்ற வசனங்கள் அனைத்தும் தியேட்டரையே தெறிக்கவிட்டது. தமிழில் கேஜிஎஃப் படத்தின் இரு பாகங்களிலும் வசனங்களை எழுதியவர் கேஜிஆர் அசோக்.
இவர் கே.ஜி.எஃப் 2 படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். அசோக் டெர்மினேட்டர், பிரபாஸின் சாஹோ, ஷ்யாம் சிங்கா ராய் போன்ற படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். கமலின் விருமாண்டி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். ஆயுள்ரேகை என்ற படத்தை இயக்கியுள்ளார். அதுமட்டுமின்றி சேகர் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.