#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அந்த சூப்பர் ஹிட் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்! வருத்தத்தில் பிரபல நடிகை! யாருன்னு பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகியுள்ளது. நடிகர் ரஜினிக்கென இந்தியளவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அவருடன் ஒரு சிறு கதாபாத்திரத்திலாவது நடித்து விட வேண்டும் என பலரும் காத்து கிடக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகை கிரண் நடிகர் ரஜினியுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டது குறித்து வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் 2002-ஆம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கிரண். அதனைத் தொடர்ந்து அவர் வில்லன், அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் சினிமாவிலிருந்து சற்று விலகியிருந்த அவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் நடிகை கிரண் தனது சமூக வலைத்தள பக்கத்தில், பாபா படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு முதலில் தனக்கு கிடைத்ததாகவும், அப்பொழுது தான் ஜெமினி படத்தில் நடித்து வந்ததால் அதில் நடிக்க முடியவில்லை எனவும் வருத்தத்துடன் கூறியுள்ளார். ரஜினியின் நடிப்பை யாராலும் தொட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.