மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"வந்தியதேவா... உங்கள் பார்வை சரியில்லையே..." பொன்னியின் செல்வன் படக் குழுவின் வைரல் போட்டோ ஷூட்.!
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடித்த ஜோடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
அதனைத் தொடர்ந்து லேசா லேசா திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். மௌனம் பேசியதே திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. விஜய்யுடன் இவர் நடித்த கில்லி, திருப்பாச்சி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் உட்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் கதாநாயகியாக நடித்தவர் இவர்.
தற்போது தளபதி விஜய் ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இவரது நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. செப்டம்பர் மாதம் வெளிவந்த முதல் பாகத்திலேயே திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
VT and Kun❤️🧿 pic.twitter.com/9FrDE7JQZG
— Trish (@trishtrashers) April 25, 2023
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களே உள்ளதால் படக்குழுவினர் அனைவரும் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளனர். இந்நிலையில் திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்திய தேவனாக நடித்த கார்த்தியுடன் எடுத்துக்கொண்ட போட்டோ சூட் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்தப் புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி இருக்கிறது.