மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அருமையான தருணம்.! சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சந்திப்பு.! செம ஹேப்பியாக பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. இவர் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
நடிகை குஷ்பு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் வெள்ளித்திரையில் கலக்கியது மட்டுமின்றி சின்னத்திரையிலும் கால் பதித்து பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்துள்ளார். அவர் தற்போது தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை குஷ்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துள்ளார். அப்பொழுது எடுத்த புகைப்படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ஒரு கப் தேனீர் மற்றும் சிரிப்புடன் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சாதாரண சந்திப்பு. அத்தருணம் மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்தது. உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கியதற்காக நன்றி என்று கூறியுள்ளார். ரஜினி மற்றும் குஷ்பு இருவரும் இணைந்து தர்மத்தின் தலைவன், மன்னன், அண்ணாமலை, பாண்டியன் போன்ற படங்களில் நடித்துள்ளனர். மேலும் இறுதியாக இருவரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.