திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
லாஷ்லியவை பார்த்ததும் இலங்கை சிறுமியின் ரியாக்சனை பாருங்கள்! வைரல் வீடியோ.
105 நாட்களாக நடந்துவந்த பிக்பாஸ் சீசன் மூன்று சில வாரங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் பாடகர் முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றி முதல் இடத்தை கைப்பற்றினர். சாண்டி இரண்டாவது இடத்தையும், லாஷ்லியா மற்றும் ஷெரின் மூன்று மற்றும் நான்காம் இடத்தை கைப்பற்றினர்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை பெண் லாஷ்லியா மூன்றாம் இடத்தை பிடித்தது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஆடல், பாடல் என ஜாலியாக இருந்த லாஷ்லியா கவினுடன் ஏற்பட்ட காதல் புயலில் சிக்கி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தார்.
இந்நிலையில் தொலைக்காட்சியில் லாஷ்லியா நடனம் ஆடும் வீடியோ ஒன்றை பார்க்கும் அவரது குட்டி ரசிகை ஒருவர் லாஷ்லியா, லாஷ்லியா என துள்ளி குதிக்கிறார். லசஷிலியாவுக்கு இப்படியும் ரசிகையா என கேட்கும் அளவிற்கு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார் அந்த குட்டி பெண். இதோ அந்த வீடியோ.