மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் பிரபு மகளின் திருமணம்.! உங்களில் ஒருவனாக கலந்து கொண்டதில் மகிழ்ச்சி லெஜன்ட் சரவணன் நெகிழ்ச்சி பதிவு.!
த்ரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார் ஆதிக் ரவிச்சந்திரன்.
அதன் பின்பு சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தை இயக்கினார். அதோடு, இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த நிலையில் தான், சமீபத்தில் இவருடைய இயக்கத்தில், எஸ்.ஜே. சூர்யா, விஷால் ஆகியோரின் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி ரூபாய் வரையில் வசூல் செய்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.
இந்நிலையில், தமிழ் திரையுலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், பிரபல நடிகரான பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் நேற்று காலை மிகப் பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் ஏராளமான திரை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றுக் கொண்டு, மணமக்களை வாழ்த்தினர். அந்த வகையில், இந்த திருமண விழாவில், நடிகரும், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளருமான லெஜண்ட் சரவணன் பங்கேற்று கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அத்துடன் மட்டுமல்லாமல், இந்த திருமணம் பற்றி அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில்,/"என்றென்றும் நம் நினைவில் வாழும் சிவாஜி கணேசன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் உங்களில் ஒருவனாக நான் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பிரபு அவர்களின் அன்பு மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதுடன், உங்கள் அனைவரது வாழ்த்துகளையும் ஆசிகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்\"
என்றென்றும் நம் நினைவில் வாழும் நடிகர் திலகம், பத்மஶ்ரீ, பத்ம பூஷன், செவாலியர் டாக்டர் சிவாஜி கணேசன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் உங்களில் ஒருவனாக நான் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். என பதிவு செய்திருக்கின்றார்.