மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தல தோனி ரசிகர்களுக்கு குட் நியூஸ்... 'எல்ஜிஎம்' ஆடியோ மற்றும் ட்ரெய்லர் லாஞ்ச்.... சென்னைக்கு என்ட்ரி கொடுக்கும் எம்.எஸ் தோனி.! அசத்தலான அப்டேட்.!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் உலகக்கோப்பை வெற்றியாளருமான எம் எஸ் தோனி சில மாதங்களுக்கு முன்பு சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கினார். அந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக தமிழ் படமான லெட்ஸ் கெட் மேரீட் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.
இந்தத் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் இவானா, நதியா மற்றும் யோகி பாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படத்தினை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்கி அவரே இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மட்டும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீடு பற்றி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
#LGM - Audio and trailer launch tomorrow and #MSDhoni & Sakshi will be attending the event..⭐ pic.twitter.com/m3KS9hMmpq
— Laxmi Kanth (@iammoviebuff007) July 9, 2023
அந்த அறிவிப்பின்படி எல்ஜிஎம் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டீர்கள் நாளை நடைபெற இருக்கிறது. பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் இந்த நிகழ்விற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி சிங் தோனி ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதற்கான அறிவிப்பை பட குழுவினர் தங்களது ட்விட்டர் பக்கம் மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.