96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஒத்த புகைப்படத்தால் கொந்தளித்த ரசிகர்.! அதிரடியான பதிலடியால் மூக்குடைத்த மாதவன்!!
தமிழ் சினிமாவில் அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பெண்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் மாதவன் சுதந்திர தினம், ரக்ஷா பந்தன் ஆகியவற்றிற்கு வாழ்த்து கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவு வைரலான நிலையில் நெட்டிசன் ஒருவர் இந்தப் புகைப்படத்தில் உங்களுக்கு பின்னால் இந்து கடவுள்களின் அருகில் சிலுவை வைத்திருக்கிறீர்கள். கிறிஸ்துவ தேவாலயங்கள் எங்காவது இந்து கடவுளின் படங்கள் உள்ளதா? நீங்க போலி நாடகம் நடத்துறீங்க எனப் பதிவிட்டிருந்தார்.
Why do they have a across in the background?! Is that a Mandir? You just lost my respect. Do you find Hindu Gods in Christian churches? All this is fake drama you did today! pic.twitter.com/w5mdrSKxRL
— JIXSA (@jiks) August 15, 2019
இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் மாதவன், உங்களை போன்றவர்களின் மரியாதை குறித்து எனக்கு எந்த கவலையுமில்லை. என்ற அவசியம் எனக்கு இல்லை.உங்களது இந்த மோசமான மனநிலை மாறும். நல்ல வேலை சிலுவைக்கு பக்கத்திலுள்ள பொற்கோயிலின் சிலையை நீங்கள் பார்க்கவில்லை. அதைப் பார்த்திருந்தால் நான் சீக்கிய மதத்திற்கு மாறிவிட்டேனா? என கேட்டுருப்பீர்கள்.
இதில் பாதி நான் வாங்கியவை மீதி எனக்கு பரிசாக வந்தவை. சிறுவயதிலிருந்து எம்மதமும் சம்மதம் என்று எனக்கு கற்றுத் தரப்பட்டுள்ளது. நான் தர்கா, குருதுவரா மற்றும் தேவாலயம் போன்ற அனைத்து இடங்களுக்கும் சென்று பிரார்த்தனை செய்வேன். உலகத்தில் முக்கியமானது அன்பு தான்.இந்த இடங்களில் எல்லாம் எனக்கு நிறைய அன்பு கிடைத்துள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.