"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
கேஸ் பிரச்சனையால், அவதியா.? இதை செஞ்சி பாருங்க.. எல்லா வாயுவும் உடனே வெளியேறும்.!
இப்போது இருக்கும் இந்த சூழலில் நாம் சாப்பிடும் மோசமான உணவு வகைகள் நம் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதிலும், வாயுப் பிரச்சனை மிகவும் தொல்லையாக உள்ளது. பெரும்பாலும், வாயுப் பிரச்சனை வர காரணம் நாம் உண்ணும் உணவு வகைகள் மற்றும் நேரம் தவறி சாப்பிடுவதால் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய வீட்டுப்பொருட்களை வைத்து மருத்துவ பானம் செய்து குடிப்பது நல்ல பலனை தரும். இந்த மருத்துவ பானத்தை எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
குறிப்பு 1 :
தேவையானப் பொருட்கள் :
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
ஓமம் - 1/2 தேக்கரண்டி
ஏலக்காய் - 1
செய்முறை :
முதலில் அடுப்பைப் பற்ற வைத்து ஒரு வாணலியை வைக்கவும். அதில் மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளின் படி சீரகம், சோம்பு, ஓமம், ஏலக்காய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு, இதனை மிக்ஸி கப்பில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இதையும் படிங்க: இரவு உணவுக்கு பின் இதை செய்தால், உடல் எடை மளமளவென்று குறையும்.. எப்படி தெரியுமா.?!
இப்போது, வேறொரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி வெதுவெதுப்பான நிலையில் ஒரு டேபிள்ஸ்பூன் அரைத்த கலவையை சேர்த்து கலந்து 1 டம்ளரில் ஊற்றி குடித்து வர வாயு தொல்லை குணமாகும்.
குறிப்பு 2 :
தேவையானப் பொருட்கள் :
பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை - 1 கொத்து
ஓமம் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 5
செய்முறை :
முதலில் அடுப்பைப் பற்ற வைத்து ஒரு வாணலியை வைக்கவும். அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளின் படி பெருங்காயத்தூள், கருவேப்பிலை, ஓமம், சீரகம், மிளகு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதை ஒரு மிக்ஸி கப்பில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் 1 தேக்கரண்டி அரைத்து எடுத்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்றாக கலந்து குடித்து வர கெட்ட வாயுத் தொல்லை நீங்கும்.