#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
'2K Couples' - ட்ரெண்டாகி அட்ராசிட்டி செய்யும் மகாலட்சுமி ரவீந்தர்..! இதுதான் காதலோ.. வைரலாகும் ரொமாண்டிக் போட்டோஸ்..!!
தமிழ் திரையுலகில் லிப்ரா ப்ரோடுக்ஷன் சார்பில் படங்களை விநியோகித்தும், தயாரித்தும் வந்தவர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன். இவரது தயாரிப்பில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் பிரபல விஜே மகாலட்சுமியை இவர் திருமணம் செய்து கொண்டார். மக்கள் மத்தியில் பயங்கரமாக பரீட்சமானவர் வீஜே மகாலட்சுமி. அதன் பின் சின்னத்திரை நடிகையாக வலம்வந்த இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கும், ரவீந்தருக்கும் திருப்பதி கோவிலில் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்து ரவீந்தர் தனது சமூகவலைதளபக்கத்தில், "மகாலட்சுமி போல ஒரு பெண் கிடைச்சா வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. ஆனா இந்த மகாலட்சுமியே என் வாழ்க்கை கிடைச்சிருக்கா. குட்டி ஸ்டோரி வித் மை பொண்டாட்டி" என்று பதிவிட்டிருந்தார்.
இதன் பின் இவர்கள் குறித்து சர்ச்சையான கேள்வி கேட்கப்படவே, தனியார் யூடியூப் சேனல்களுக்கு பதிலளித்து வந்தனர். இந்த நிலையில், ரசிகர்கள் பதிவிட்டுள்ள தங்களது புகைப்படத்தை தமது இன்ஸ்டாவில் பதிவிட்ட மகாலட்சுமி, "2k Couples" என கேப்ஷன் போட்டுள்ளார்.
இந்த பதிவு பயங்கரமாக வைரலாகி வருகிறது. முன்னதாக விமர்சனங்கள் குறித்து பேசியபோது மகாலட்சுமி, "இந்த விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களை பார்க்கும்பொழுது ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற விஷயம் தான் அதிகமாக தோன்றுகிறது. அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.